blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, December 29, 2015

மக்களின் அக்கறையற்ற தன்மை: டெங்கு பரவும் அபாயம்!

மேல் மாகணத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மக்களின் அக்கறையற்ற தன்மையினால் டெங்கு பரவும் கூடிய அபாயமுள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.


மக்கள் தமது குப்பைகளை பொது இடங்களில் அதாவது, பெரும்பாலும் கைவிடப்பட்ட இடங்கள்,பாழடைந்த கட்டடங்கள் மற்றும் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் மக்கள் கழிவுப்பொருட்களை கொட்டுவதால் அவை அகற்றப்படாமல் இருப்பதால் அவ்விடங்களில் டெங்கு நுளம்புப் பெருகுவதாக மேல்மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

நுகேகொடை,மொரட்டுவை,கொலன்னாவ,தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் டெங்குக் காய்ச்சல் பரவியுள்ளதை அவதானிக்க முடியுமென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி பெரேரா கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

_நன்றி வீரகேசரி_

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►