
குறித்த பஸ்சின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைய கனகராயன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகநபர்கள் மூவரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சொகுசு பயணிகள் பஸின் பொருட்கள் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சந்தேகபர்கள், 25 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய 13 கிலோகிராம் கேரள கஞ்சாவை சூட்சமமான முறையில் மறைத்து வைத்திருந்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply