தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறார் என 'இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபா கணேசனை மேற்கோள் காட்டியே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
என்னால் ஒரு சில தினங்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்க முடியும் எனினும் நீதிமன்ற நடவடிக்கை எதையாவது இந்தியா எடுத்தால் அது பல மாத காலம் நீடிக்கும் என ஜனாதிபதி கருதுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து தான் இந்திய பிரதமருடன் ஏற்கனவே பேசிவிட்டார் எனவும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக இந்திய அதிகாரிகள் தேவையற்ற பணத்தை செலவிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த விடயத்தை இங்குள்ள தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்றில் இந்தியத் தூதரகம் மேல்முறையீடு செய்துள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply