blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, November 12, 2014

உலகக்கிண்ணம் - 2015; சூப்பர் ஓவர் நீக்கம்; பரிசுத்தொகை ரூ.60 கோடி!

https://yourkattankudy.files.wordpress.com/2014/11/icc-2015-world-cup.jpgஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் பெப்ரவரி 14-ம்திகதி முதல் மார்ச் 29-ம்திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்றுமுன்தினம் ஆலோசனை செய்தது. 

இதன்படி உலகக்கிண்ணத்தில் நொக்அவுட்’ சுற்றில் சூப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
 
கால் இறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படடமாட்டாது. 

குரூப் ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

இதேபோல இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கிண்ணம் அளிக்கப்படும். 

நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.60 கோடியாகும்.

2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தியா, இலங்கை, பங்காளாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் மொத்தம் ரூ.48 கோடி பரிசு தொகை தான் வழங்கப்பட்டது. 

2015-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும்.
 
அதே நேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கோப்பையை வென்றால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடியும்இ அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், கால் இறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்.

இம்முறை அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து இருநாடுகளும் இணைந்து 1992ம் ஆண்டு நடாத்திய உலகக் கிண்ணப்போட்டிகள் போன்றே நடாத்த தீர்மானித்திருக்கின்றன. 

கிரிக்கட் உலகக்கிண்ண வரலாற்றில் 1992 போட்டிகள் எவராலும் மறக்க முடியாதது. 

1992 போட்டிகளிலிலேயே பல மாற்றங்கள் கிரிக்கட்டில் தடம்பதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►