பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகூடிய சில்லறை விலைக்கு இவற்றைத் தொடர்ந்தும் விற்பனைசெய்ய முடியாது என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது கையிருப்பு உள்ள பருப்பு, சீனி முடிவடைந்தால் எதிர்காலத்தில் விற்பனைக்கு இல்லாமல் போகும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பருப்பு, சீனி உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை விலையை அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கமைய பருப்பு கிலோ ஒன்றுக்கு 169 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சீனிக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், பொதிசெய்யப்படாத சீனி ஒரு கிலோ 87 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனைசெய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு விலைக்குப் பொருட்களை விற்கமுடியாது என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலாபம் இல்லாவிட்டாலும், கட்டுப்பாட்டு விலைக்கே விற்கவேண்டும். அதிக விலைக்கு விற்பனைசெய்து பிடிபட்டால் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடுகின்றனர். அதை எமக்குச் செலுத்தமுடியாது என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருப்பு, சீனி விற்பனையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கத்தின் செயலாளர் கே.நாதன் கருத்து வெளியிடுகையில், "இறக்குமதி செய்யப்படும் பருப்பு கிலோ ஒன்று 180 ரூபாவுக்கும் அதிகமாக உள்ளது.
ஆனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலை 169 ரூபா. இந்நிலையில், இந்தப் பொருட்களின் விற்பனையை நாம் தொடரமுடியாது. கையிருப்பு உள்ள பருப்பு, சீனி முடிவடைந்தால் விற்பனைக்கு இல்லாமல் போகும்'' என்று தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, December 29, 2015
எச்சரிக்கை!!: அரசின் கட்டுப்பாட்டு விலையால் பருப்பு, சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்படும்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...

No comments:
Post a Comment
Leave A Reply