blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, February 21, 2015

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!! (Photos)

உலகின் நியதிக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் அப்படியானதோர் நிகழ்வே டற்போது நடந்துள்ளது.

அந்த வகையில் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று  இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது.

சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த குறித்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.

குறித்த கன்று இன்று பிற்பகல் வரை ஆரோக்கியமாக காணப்டுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக காணப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

உலகில் இடம்பெறும் வியத்தகு விடயங்களை அவதானித்த கிளிநொச்சி மக்கள், குறித்த பசுவினையும், கன்றினையும் பார்க்க ஆவல் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►