காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு கண்ணில்லையா? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன், கஜதீபன் தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், சர்வதேச அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்த பாஸ்கரா மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீடீரென ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வீதிகளினை வழிமறித்து ஊர்வலமொன்றை ஆரம்பித்தனர். அவர்கள் வைத்தியசாலை வீதியினூடாக சென்று பின்னர் காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து தமிழராய்ச்சி மாநாட்டினில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களது நினைவு தூபி முன்னதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்ட முடிவினில் உரைகள் இடம்பெற்றிருந்தது. அங்கு வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுமந்திரனின் கொடும்பாவி தீக்கிரையாக்கப்பபட்டு உள்ளது.
தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களது நினைவு தூபி முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞரணியினை சேர்ந்தவர்கள் வீதி வழியாக கட்டி இழுத்துவரப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவியை தீக்கிரையாக்கினர். அவ்வேளையில் கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்தினிற்கெதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, February 21, 2015
காணாமல் போனோரை கண்டு பிடித்து தாருங்கள்!! கண்ணீருடன் உறவினர்கள்!! செவி சாய்க்குமா அரசு!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்ற...
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply