blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, February 22, 2015

மஹிந்த இல்லையேல் வெற்றி இல்லை!! - விமல் வீரவன்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

58 லட்சம் மக்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்துள்ளனர்.

அன்னப்பட்சிக்கு வாக்களித்த பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். மீண்டும் மஹிந்தவிற்கு வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றார்கள்.

மஹிந்த ராபஜக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நானும் தேர்தலில் போட்டியிடுவேன்.

அமைச்சுப் பதவிகள் இன்றி இருப்பதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது.

அமைச்சுப் பதவி எங்களுடன் ஒட்டிக் கொண்ட விடயமல்ல. எனவே பதவி இன்றி இருப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த குறுகிய நேர் காணலில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►