அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாசறையிலிருந்து உருவான இனவாதியே ரவூப் ஹக்கீம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள இனவாதத்தை தூண்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளரே ரவூப் ஹக்கீம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான நோக்கில் பொது வேட்பாளருக்கு ஹக்Pகீம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறான ஓர் நிலையமையிலும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகலமைப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் சஹிர் அஹமட் இரண்டரை ஆண்டுகளாக மாகாணசபையில் அங்கம் வகித்த போதிலும் மக்களுக்கு எவ்வித சேவையும் ஆற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
30 ஆண்டுகள் யுத்தம் காரணமாக நாடு பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும், எதிர்காலத்தில் பிரிவிவினைவாதம் தலைதூக்குவதனை எவரும் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் இனவாத நிலைப்பாட்டை கைவிட்டுச் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, February 25, 2015
ஹக்கீம் இனவாதி! மஹிந்தவின் ஆதரவாளரே அவர்!! - பாய்கிறார் தயா கமகே
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்ற...
-
உலகின் நியதிக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் அப்படியானதோர் நிகழ்வே டற்போது நடந்துள்ளது.
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply