blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80101

Wednesday, February 25, 2015

மஹிந்தவின் ஆடம்பர குளியல் ! தண்ணீருக்கு மட்டும் மில்லியனுக்கு மேல் செலவு!

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகளும், வீண் செலவுகளும் வெளியாகி மக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கி வரும் வேளையில்,  அலாி மாளிகையில் தண்ணீருக்காக செலவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.

2014 நவம்பா் மாத தண்ணீருக்காக 13 லட்சத்து 24 ஆயிரத்து 226 ரூபாய் 26 சதம் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.  (13,24,226.26)

2014 டிஸம்பா் மாதத்திற்கான தண்ணீா் கட்டணம் 10 லட்சத்து 37 ஆயிரத்து 650 ரூபாய் 21 சதமாக செலுத்தப்பட்டுள்ளது. (10,37,650. 21)

ஜனாதிபதித் தோ்தல் தோல்வியை அடுத்து 2015 ஜனவாி மாதம் மஹிந்த அலாி மாளிகையை விட்டு வேளியேறினாா்.

ஜனவரி மாத தண்ணீருக்கான பட்டியலாக  45 ஆயிரத்து 238 ரூபாய் 30 சதமாக இருப்பதாக அறிய வருகிறது. இது மஹிந்தவின் காலத்தில் செலவிடப்பட்டதை விட  குறைந்த கட்டணமாகும்.

இலங்கை வங்கி காசோலை மூலம் மேற்படி கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருகக்கின்றன.

நவம்பா்  மாத தண்ணீா் பட்டியலுக்கான  கொடுப்பனவின் காசோலை இலக்கம் 608926,  டிஸம்பா் மாத மாத தண்ணீா் பட்டியலுக்கான கொடுப்பனவின் காசோலை இலக்கம் 647120, ஜனவரி மாத மாத தண்ணீா் பட்டியலுக்கான கொடுப்பனவின் காசோலை இலக்கம் 647205 மூலம் மேற்படி கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►