
இதன்படி, மனித உரிமைகள் விவகாரத்துக்குப் பொறுப்பாக தனி அமைச்சு அமைக்கப்படவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ரஜீவ விஜேசிங்கவுக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பிரதமரும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சுதந்திரக் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தாலும், தற்போது 10 நிபந்தனைகளுடன் தேசிய அரசில் அங்கம் வகிக்கும் நிலைப்பாட்டில் இருந்துவருகின்றது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றம்செய்யப்பட்டாலும், பாதுகாப்பு, காணிஅதிகாரம், மாகாண சபைக்குரிய விடயதானங்கள் ஆகியன ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட 10 நிபந்தனைகளே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.
சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், சிலருக்கு இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, புதிய அரசின் அமைச்சர்களின் எண்ணிக்கை நூறாக உயரவுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை 45 ஆக உயரவுள்ளது. புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாம் என அறியமுடிகின்றது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதற்கான சுழ்நிலை இருந்தாலும் பிரதியமைச்சுப் பதவி வகித்த விநாயகமுர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) எவ்வித பொறுப்புகளையும் வழங்காதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளே, தேசிய அரசமைப்பதற்கு சுதந்திரக்கட்சி இணங்கியுள்ளதால்.
நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. ஏழாவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் 22 ஆம் திகதி நிறைவடைகிறது.
எனவே. ஏப்ரல் 23 இல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேசிய அரசில் அங்கம் வகிப்பதற்கு சு.க. பச்சைக்கொடி காட்டியுள்ளதால் தேர்தல் ஒத்திவைக்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி தேர்தல் முறைமையில் மாற்றம்கொண்டுவரப்பட்ட பின்பே பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பற்றி இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply