புலிகள்
மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’
மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சூழலையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்பி வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய யூனியன் தற்போது புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
இந்த திருப்பம் தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது
அரசியல்வாதிகள் சிலர் ஐரோப்பா விற்கான விஜயத்தினை மேற்கொண்டதை அடுத்தே
ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் இத்தடையை நீக்கியிருந்தது என்பதை நாம்
அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின்
எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் நாட்டு
மக்கள் இது விடயத்திலும் சிந்திக்க வேண்டியது முக்கியம் என்றும்
தெரிவித்தார்.
சிறுவர் மற்றும்
மகளிர் விவகாரத்துறை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்
ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற நிகழ்வொன்று அலரி மாளிகையில் நடை
பெற்றது. சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த
நிகழ்வில் அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனா திபதி இவ்வாறு
தெரிவித்தார்.
அமைச்சர்கள்
திஸ்ஸ கரலியத்த, பவித்ரா வன்னியாராச்சி, பாராளு மன்ற உறுப்பினர் சுதர்ஷனி
பெர்னாண் டோபுள்ளே ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும்
தெரிவிக்கையில்,
இக்காலங்களில்
நாம் நாட்டின் பல்வேறு துறையினரையும் சந்தித்து அத்துறையில் நிலவும்
பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் நாட்டின் எதிர்காலப் பயணம்
குறித்தும் கலந்துரையாடி வருகின்றோம்.
அதன் ஒரு
அம்சமாகவே சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்துறை, ஆரம்பப் பாடசாலை
ஆசிரியர்கள் உள்ளிட்ட உத்தியோகத் தர்களுடன் அலரி மாளிகையில் இச்சந்திப்பினை
ஏற்பாடு செய்தோம்.
இன்று அரச துறையில் ஆண்களை விட பெண்களே அதிகமாகவும் முன்ன ணியிலும் உள்ளனர்.
அமைச்சுக்கள்,
அரச நிறுவனங்கள், ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளிலும் அவர்கள் முன்னணி
வகிக்கின்றனர்.
அரசாங்கத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தை இல்லாதொழிப்பதும் அவர்களே என்றால் பொருந்தும். மஹிந்த சிந்தனை செயற்திட்டத்தில் கடமையாற்றுபவர்களும் பெருமளவில் பெண்களே.
அரசாங்கத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தை இல்லாதொழிப்பதும் அவர்களே என்றால் பொருந்தும். மஹிந்த சிந்தனை செயற்திட்டத்தில் கடமையாற்றுபவர்களும் பெருமளவில் பெண்களே.
நான் கடந்த முறை தேர்தலில்
வாக்களிக்கச் சென்ற போது வாக்களிக்கும் வரிசையில் ஆண்கள் அணியில் இரண்டு
மூன்று பேரே நிற்க பெண்கள் அணியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அப்போதே நான் வெற்றி பெறுவேன் என்று உறுதி கொண்டேன்.
நாட்டின் பல
தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் பெண்களின்
பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இன்றியமை யாததாக அமைந்திருந்ததை குறிப்பிட
விரும்புகிறேன்.
எனது மஹிந்த
சிந்தனைக் கொள்கை விஞ்ஞாபனத்தில் முதல் பகுதியில் மகளிர் தொடர்பான
விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டில் மகிழ்ச் சியும் நிம்மதியும்
நிலைக்க பெண்கள் சந்தோசமாக இருப்பது முக்கியம். வீட்டிலும் பெண்கள்
சந்தோசமாக இருந்தால் முழு குடும்பமும் சந்தோசத்தில் திளைக்கும். உலகளவில்
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெரிதும் துன்பப்படுபவர்கள்
பெண்களே.
சிரியா, லிபியா, பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், நாடுகளில் மட்டுமன்றி
எமது நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போதும் துன்பப்பட்டவர்களும் பெண்களே.
நாட்டுக்கும் படையினருக்கும் தாய்மாரும் பெண்களும் வழங்கிய ஆசீர் வாதம் அவர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகளைவிட பலமாக அமைந்தது. வெளிநாடுகளில் டொலர்களுக்காக செயற்பட்டவர்களால் பெண்களாகிய உங்களைப் பணியவைக்க முடியாமற் போனது.
2005ற்கு
முன்பிருந்ததைப் போன்றல்ல. இப்போது நாடு மாற்றமடைந்துள்ளது. அச்சத்துடனும்
சந்தேகத்துடனும் வாழ்ந்த யுகம், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு
வாயிலில் காவல் காத்த யுகம் இன்றில்லை.
நாம் மஹிந்தோதய பாடசாலைகளை
நிர்மாணித்துள்ளோம். நவீன உலகோடு நாம் முன்னேறிச் செல்கின்றோம். உலகத்தை
வெல்லக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது இலக்கு.
பல்கலைக்கழகங்களுக்கு
தற்போது 25,000 ற்கு மேற்பட்டோர் அனுமதி பெறுகின்றனர். அதற்கான வசதிகள்,
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சட்டத்துறையில் மருத்துவத்துறையில் இப்போது பெண்களே
அதிகமாகவுள்ளனர். எனினும் பாராளுமன்றத் தில் பெண்கள் பிரதிநிதித்துவம்
மிகக்குறை வே. எதிர்காலத்தில் இந்நிலை முன்னேற்றமடையும்.
அரச சேவையில் 15
இலட்சம் பேர் தற்போது பணிபுரிகின்றனர். அன்று ஆறு இலட்சமாக இருந்த அரச
ஊழியர்கள் தொகையை 3 இலட்சமாக்கி அரச சார்பற்ற நிறுவனங்களை ஊக்குவிக்க
அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
நாம் அரச ஊழியர்கள் மீது நம்பிக்கை
கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply