எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, October 21, 2014
நடிகர் விஜய் அறிக்கை: கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் அதிரடி நீக்கம்!
கத்தி பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம்.
சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது.
எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் 'கத்தி' திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
'கத்தி' திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தமிழக காவல்துறைக்கும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் என தீபாவளி வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply