blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 15, 2014

களுத்துறையில் இருந்து 320 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை


களுத்துறையில் இருந்து 320 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகளுத்துறை மாவட்டத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படும் பகுதிகளில் உள்ள 320 குடும்பங்களை சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் பணிப்புரை செய்துள்ளது.


களுத்துறை மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் பின்னர் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படும் பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக மண்சரிவு மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலைக் காரணமாக களுத்துறையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 09 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, களுதுறை மாவட்டத்தின் சில பகுதிகள் அதி எச்சரிக்கை வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த பிரதேசங்கள் தொடர்பில் தொடர் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும்   ஆர்.எம்.எஸ்.பண்டார கூறியுள்ளார்.

குறிப்பாக அகலவத்தை பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுவதாகவும் மண்சரிவு மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் இன்று இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►