செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது .மூன்று பேர் மரணத்திற்கும் 60 க்கு மேற்பட்டோர் காயமடைந்ததற்கும் காரணமாய் இருந்த ஞானசேர என்ற மனித நேயமற்றவன் கைது செய்யப்பட வேண்டும்.
வன்முறையை தூண்டி எமது குழந்தைகளையும் பெண்களையும் முதியவர்களையும் சொத்துக்களையும் அழிப்பதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்றால் அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்காமல் ஏன் தாமதிக்கின்றது? ஏன் ஞானசேரர் நடத்திய கூட்டத்தினையும் ஊர்வலத்தினையும் பொலிசார் தடுக்க முன்வரவில்லை.
ஏன் பொருளாதாரத்தில் குறிவைத்து தாக்குகின்றார்கள்? அடுத்த கட்டமாக எமது சகோதரிகள் மீதும் கைவைக்கலாம். ஜனநாயகத்தை மதிக்கும் முஸ்லிம் சமூகம் சட்டத்தினையும் ஒழுங்கையும் நேசிக்கின்றது ஆனால் அநாகரிகமற்ற அடாவடித்தனங்களை வெறுக்கின்றோம்.
இக்குற்ற செயலுக்கு காரணமாய் இருந்தவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். அதனை அனைத்து முஸ்லிம்களும் ஒன்றினைந்து அரசாங்கத்தை வலியுத்த வேண்டும். முஸ்லிம்கள் உலக ஆசை மரணத்தின் மீது பயம் கொண்டவர்கள் அல்ல. யா அல்லாஹ் எமது சகோதர சகோதரிகளை சொத்து செல்வங்களை பாதுகாப்பாயாக!
No comments:
Post a Comment
Leave A Reply