2014 உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் லீக் போட்டிகள் சில இன்று அதிகாலை நடைபெற்றன.
இதில் ‘டி’ பிரிவு போட்டியில் உருகுவே அணியும் கோஸ்ட்டரிக்கா அணியும் மோதின.
போட்டி ஆரம்பித்து சில நிமிடத்தில் பெனால்டி மூலம் கோலொன்றை போட அதே 54வது நிமிடத்தில் கோஸ்ட்டரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தது.
தொடர்ந்தும் இரண்டு கோல்களை அடித்த கோஸ்ட்டரிக்கா, ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் 3 க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
மற்றுமொரு போட்டி பெலோ ஹொரிசோண்ட்டில் உள்ள எஸ்ட்டாடியோ மினிரவ் மைதானத்தில் நடைபெற்றது.
‘சி’ பிரிவு போட்டியான இதில் கிரீஸ் அணியும் கொலம்பியா அணியும் மோதின.
போட்டியின் முதல் பாதிவரை கொலம்பியா அணி மாத்திரமே ஒரு கோல் அடித்திருந்தது.
இரண்டாம் பகுதியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கொலம்பியா, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கிரீஸை வீழ்த்தியது.
16 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நுழைந்த கொலம்பியா இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
அத்துடன் இன்று காலை நடைபெற்று முடிந்த மற்றுமொரு போட்டியில் இத்தாலியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியடைந்தது,
மானஸ்ஹியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்ததுடன் , போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் இத்தாலியின் மரியோ பலடோலி அடித்த கோல் மூலம் இத்தாலி 2 கோல்களை பெற்று வெற்றியீட்டியது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 15, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன்
-
இலங்கை மருத்துவர் ஒருவரின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply