யாழ்.சுதுமலையில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மானிப்பாய் பகுதியை சேர்ந்த 4 பேரும் வவுனியாவை சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கைது செய்யபப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுதுமலை பகுதியில் சந்தேகநபர்களால் நேற்று அதிகாலை மேற்கொண்ட தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.
தாக்குதலின் பின்னர் குறித்த இரு பெண்களினதும் தங்க நகைகளை சந்தேகநபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply