மீனவர்கள்
பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
என்று மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி
தலைமையிலான மத்தியஅமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த
நிர்மலா சீதாராமனும் ஒருவர்.
இவர் மத்திய வர்த்தக துறை இணை அமைச்சராக
உள்ளார். அமைச்சராகபதவி ஏற்றபின் முதல்முறையாக நேற்று சென்னை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள்
பிரச்சினையில் பா.ஜனதா அக்கறை கொண்டுள்ளது. மத்திய அரசின் முயற்சியால்
தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்த
தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply