கண்டி மாவட்டத்தில் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பேராதனை போதனா வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையின் மகப்பேற்று அறையொன்றுக்குள் 18 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களை, தாதியர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெதரிவித்து அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் பேராதனை போதனா வைத்தியசாலையில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயபந்து ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பேராதனை கிளைத் தலைவர் பிரதீப் நந்தசேன கூறியுள்ளார்.
பேராதனை வைத்தியசாலைக்குள் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களை தாதியர்கள் தடுத்து வைக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply