பெருந்தோட்ட
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 25 ஆவது பேராளர் மாநாடு பண்டாரவளை மாநகர சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவித்த கருத்து:-
இலங்கையில்
இறுதியாக இந்த தமிழ்மக்களுக்கு பிரஜாவுரிமை கிடைக்கப்பெற்றது. 2003 ஆம்
ஆண்டு நான் பிரதமரான போதே இந்த பிரச்சினைக்கு தீ்ர்வு வழங்கப்பட்டது.
தோட்டப்புறப் பாடசாலைகளை பொறுப்பேற்க வேண்டிய நிலை காணப்பட்டது. அவற்றை
அபிவிருத்து செய்வதற்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்தோம்.
வீட்டுப்பிரச்சினைக்காகா நிதியம் ஒன்றை ஆரம்பித்தோம். அதன் இலக்காக
வருடத்திற்கு 5 ஆயிரம் அமைக்கும் திட்டம் காணப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளை
கடந்துள்ளது குறைந்த பட்சம் ஒரு லட்சம் வீடாகவே அமைக்கப்பட்டிருக்க
வேண்டும். 30 ஆயிரம் வீடுகளே உள்ளன.
சொகுசு வீடுகளை கொழும்பில் அமைக்க வரி
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் எமக்கு அதிகாரம்
இல்லாது போனது. அதன் பின்னர் நடந்துள்ளது.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் அங்கு கருத்து வெளியிடுகையில்.
“7
பேச்சஸ் காணி வழங்கி 30 ஆயிரம் வீடுகளை அமைத்துள்ளனர்.இவை தொழிலாளர்களின்
கடனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் இவற்றிற்கான காணி உறுதியை வழங்க
அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆகவே ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில்
விக்கரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்த மக்களின் காணி
உறுதிகள் வழங்கப்படும் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம்.”
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 16, 2014
பெருந்தோட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசு தவறியுள்ளது - ரணில்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
இரத்தினபுரி இலுக்புலுவ பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதததால் தாக்கப்பட்டு, கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீ...
-
அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply