மாத்தளை நகரில் சட்டவிரோதமான முறையில் கருகலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கரு கலைப்புகளை மேற்கொண்ட போலி வைத்தியர் ஒருவரும் அவருக்கு உதவியாளனாக செயற்பட்டவருமே நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் சந்தேகநபர்கள் கரு கலைப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கருகலைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மருந்து வில்லைகளை சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply