புதிதாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று (22) காலை ஆரம்பமானது.
பத்தரமுல்லையில் உள்ள மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் இந்த அமர்வு இடம்பெற்றது.
மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் தலைமையில் ஆறாவது மேல்மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது.
ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யாத உறுப்பினர்கள் முதலில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ்
பெர்னாண்டோ இதன் போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பின்னர் ஆறாவது மேல்மாகாண சபையைக் கூட்டுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாகாண சபை செயலாளரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனடிப்படையில், ஆளும்கட்சியின் சுனில் விஜேரத்ன மற்றும் எதிர்க்கட்சியின் ஜோர்ஜ் பெரேரா ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
பின்னர் மாகாண சபைத் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டிய ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
சபையின் மணி ஓசை எழுப்பாமல் வாக்கெடுப்பு நடத்தப்படுவது சட்டத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டார்.
அதன் போது, எழுந்துநின்ற மாகாண அமைச்சர் நிமல் லன்ஸா மீண்டும் வாக்கெடுப்பை முன்னெடுக்க இணக்கம் தெரிவித்தார்.
வாக்கெடுப்பின்
போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா 37 வாக்குகளைப்
பெற்றுக்கொண்டதோடு, ஆளும்கட்சி உறுப்பினரான சுனில் விஜேரத்ன 60 வாக்குகளைப்
பெற்றுக்கொண்டார்.
23 மேலதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர் சுனில் விஜேரத்ன சபைத் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர்,
பிரதி தவிசாளருக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாண சபை
உறுப்பினர் யசபால கோரலகே, மற்றும் ஜனநாயக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்
சுசில் கிந்தெல்பிட்டிய ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.
சுசில் கிந்தெல்பிட்டிய 33 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் யசபால கோரலகே 61 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
28 மேலதிக வாக்குகளைப் பெற்ற யசபால கோரலகே பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply