மீரிகம பள்ளேவெல பகுதியில் ஒருவகை மதுபானத்தை அருந்தியதால் சுகயீனமுற்ற
இருவர் உயிரிழந்தமை தொடர்பில் அத்தனக்கல உதவி பொலிஸ் அத்தியட்சகர்
தலைமையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அருந்திய மதுபானத்தின் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மதுபானம் அருந்தியதை அடுத்து சுகயீனமுற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகர் ஒருவருடைய வீட்டில் நேற்றிரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தில் இவர்கள் மதுபானத்தை அருந்தியுள்ளனர்.
இதனையடுத்து சுகயீனமுற்ற 57 வயதான குறித்த வர்த்தகரும் அவரது 48 வயதான நண்பனும் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply