மாத்தளை மனித புதைக்குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களை
மேலதிக பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனித எச்சங்கள் எந்த காலத்திற்குரியது
என்பதை கணிப்பதற்காக அமெரிக்காவின் ஃப்லோரிடா மாநிலம் மயாமியில் உள்ள
இரசாயன ஆய்வுக் கூடத்தில் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாத்தளை
மனிதப் புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களை பரிசோதனைக்கு
உட்படுத்துவதற்கு குறித்த நிறுவனம் எழுத்தமூல விருப்பத்தை
தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய
இன்னும் ஓரிரு தினங்களில் மனித எச்சங்களை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க
உத்தேசித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும்
கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply