காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்துழைப்பு
வழங்குவதில் தமது நாடு அர்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா
தெரிவித்துள்ளார்.
மலேஷியப் பிரதமர் நஜிப் ராசாக்குடன் கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பரக் ஒபாமா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்து
சமுத்திரத்தில் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா நீர் மூழ்கி கப்பல்
விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரை எந்தவொரு பயனும்
இதுவரை கிடைக்கவில்லை.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக வான் மற்றும் கடல் பரப்பு தேடுதல் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த
மாதம் 8 ஆம் திகதி 239 பேருடன் காணாமல் போன மலேஷிய விமானம் தொடர்பில்
இதுவரை நம்பமாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply