நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும்
வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர்
பொள்ளாச்சிக்குப் அருகிலுள்ள ஜமீன் காளியாபுரம். 1920ம் வருஷம் பிறந்தவர்
நானம்மாள்.
நானம்மாள் தனது தாத்தா மன்னார்சாமியிடம், 5 வயதிலே யோகாசனம்
பயின்றதாக கூறுகிறார். இது பற்றி கூறிய அவர் இதுவரை, யோகாசனப் பயிற்சியை எக்காரணத்தை கொண்டும் தவிர்த்ததே இல்லையென்றார். இதுவரை அவருக்கு எந்த வியாதியும் வந்ததும் இல்லை.
இது வரை மருத்துவமனை போனதும்
இல்லையென்றும் கூறியுள்ளார். யோகாசனம் செய்வதால், எலும்பு,மூட்டுகள் தமக்கு
வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். யோகா செய்தால், உள்ளுறுப்புகளுக்கு ரத்த
ஓட்டம் கிடைக்கும். கணையம், சிறுநீரகம், இதயம் எல்லாம் முழு பலத்துடன்
இயங்குவதால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பெண்களுக்கு கர்ப்பப்பை
பிரச்னை இருந்தாலும், தானாகவே போயிடும். இந்த விழிப்பு உணர்வு நம்ம
மக்கள்கிட்ட வரணும்கிறதுக்காகதான் ஊருக்குள்ள எடுத்துச் சொல்லி வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.
பல் துலக்குவது, குளிப்பது மாதிரி யோகாசனத்தையும் தினசரி தவறாமல் செய்வது தான் தன்னுடைய பெரிய பலம் என்கிறார் நானம்மாள் பாட்டி.
உணவுப் பழக்கத்தைப் பற்றி கூறிய அவர், ''தினமும் காலையில் வேப்பங் குச்சியை வைத்து கால் மணி நேரம் பல்லுக்குள் வைத்த மெல்லுவதாக கூறினார். வேப்பங் குச்சியின் கசப்பு வாயில் இறங்குகிறப்போ, ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோட சர்க்கரை நோய் வர்றதையும் தடுக்கும். காலையில் சூர்ய நமஸ்காரத்தில் தொடங்கி, சில மணி நேரம் ஆசனங்களைச் செய்வதாகவும் கூறினார்.
'செஞ்சுரி’ அடிக்கப்போகும் இந்த வயதிலும், பாட்டிக்குக் கூர்மையான பார்வைத் திறன் உள்ளது. இவர் தன் உடலை ரப்பர் போல வளைத்து சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் என்று மிகச் சிரமமான ஆசனங்களையும் அனாயாசமாகச் செய்து அசத்துகிறார்.
பாட்டியின் சாதனைகள்:
* கோவையில் 50 வயதுக்கு உள்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர்.
* சமீபத்தில் அந்தமான் நிகோபர் தீவில் நடைபெற்ற, தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில், 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.
* மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்தவர்.
* குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் யோகா பயிற்சியளிக்கும் நானம்மாள், துரித உணவுகளைத் தவிர்ப்பது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு முகாம்களை நடத்துகிறார்.

No comments:
Post a Comment
Leave A Reply