தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள யானையொன்றினால் தூக்கியெறியப்பட்ட தென்னை
மட்டையொன்று மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள கல்விகாரை வீதியில்
பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது பட்டு அப்பெண் காயமடைந்த
சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, மிருகக்காட்சிசாலையில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில் சுவருக்கு மேல் வலைகளை நிர்மாணிக்க மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
குறித்த மிருகக்காட்சிசாலையிலுள்ள யானைகளுக்கு தற்போது காச நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply