blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 27, 2014

ரணில் விக்ரமசிங்க லாஸ்வேகாஸ் சென்று கெசினோ விளையாடினார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நல்ல வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சி தடுப்பதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கெசினோ தொடர்பில் கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நேற்று முன்தினம் பாராளுமன்றில் கெசினோ சட்டம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி குறிப்பிடுகிறது, அந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க லாஸ்வேகாஸ் சென்று கெசினோ விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'நல்ல வேலைகளை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது. நேற்று முன்தினம் கெசினோ சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். ரணில்விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. அவர் லாஸ்வேகாஸ் சென்று கெசினோ விளையாடுகின்றார்.  இங்கு உறுப்பினர்கள் எதிராக வாககளிக்கின்றனர். 2005ஆம் ஆண்டு கெசினோ வர்த்தகர் ஒருவரின் பஸ்ஸில் நாம் சென்றோம். அதில் நாமும் ஏறிச் சென்றோம் பின்னர் தான் எமக்குத் தெரியும். 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது தான் மாகாணத்தில் அமைக்க இருந்த குதிரை ஓட்டப்பந்தயம் கெசினோவா வர்த்தகமாகும். 2002ஆம் ஆண்டு 5000 ஏக்கரில் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார். தற்போது எமது நாட்டு அடுத்த தலைமுறைக்காக பாரிய அபிவிருத்தி திமட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.'
இந்நிலையில் கெசினோவை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கெசினோ தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
'அரசாங்கம் தற்பொழுது புதிய விளையாட்டு ஒன்றை கொண்டு வந்துள்ளது. நாயக்க தேரர்கள் மற்றும் பேராயர்கள் உட்பட பல தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் நாட்டுக்கு ஒவ்வாத கெசினோ சட்ட மூலம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து எதிரக்கட்சிகளும் இந்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும் அராசங்கம் புத்தாண்டில் சம்பிரதாயபூர்வமான புதிய விளையாட்டுகளை கொண்டுவந்துள்ளது.'
இதேவேளை, மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார கூறுகின்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►