blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

5 சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் ஆசிரியர் கைது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதி பாடசாலையில் கல்வி கற்கும் 5 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 5ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 11 வயதுடைய அதேபிரதேசத்தைச் சேர்ந்த 5 சிறுமிகளை கடந்த 3 மாதங்களாக பாடசாலையில் கற்பித்து வரும் தம்பிலுவிலைச் சேர்ந்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் தகவல் அறிந்து குறித்த ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4ம் திகதி அந்த பிரதேசத்தில் வேலை பார்க்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு இது தெரியவந்ததையடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து வலயக் கல்வி பணிப்பாளருக்கு கோட்டக்கல்வி அதிகாரியோ பாடசாலை அதிபரோ கிராம சேவகரோ பெற்றோரோ தெரியப்படுத்தவில்லை எனவும் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இது தொடர்பாக அறிந்ததையடுத்து உடனடியாக பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவத்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►