கல்முனை -13, 183, நகர மண்டப வீதி, முஹம்மது ஹனிபா முஹம்மது றினோஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிபதி எம். பி. முஹைடீன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டபின்படிப்பு பட்டதாரியாவர், கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவராகவும், கல்முனை பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார்.
ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அல்-ஸுஹறா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். இவர் எஸ்.எச் ஹனீபா (ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்) (எ.எம்.எச்), எச். நூர்ஜஹான் தம்பதியின் புதல்வராவார்.
No comments:
Post a Comment
Leave A Reply