blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

157.7 மில்லியன் அழுக்கு நாணயத்தாள்கள் அழிப்பு

தூய நாணயத்தாள் கொள்கைக்கு அமைய 67.7 பில்லியன் ரூபா முகப்பெறுமதியுள்ள 157.7 மில்லியன் அழுக்குற்ற நாணயத் தாள்களை மத்திய வங்கி அழித்தது என மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.
மத்திய வங்கியின் நாணயப் பகுதி, நாணயத் தாள்களை பிரித்து எடுப்பதற்காக அறிவுறுத்தல்களை கொண்ட ஓர் சுற்றறிக்கையை வெளியிட்டது. இதைவிட ஊடகங்கள் வழியாக நாணயத்தாள்களை பேணுவது பற்றி விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்பட்டன.

நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களினதும் பாரம்பரிய அடையாளங்களை சித்திரிக்கும் 10 ரூபா பெறுமதியான நாணயங்களை தொடராக வெளியிட மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இப்படியான ஒவ்வொரு நாணயத்திலும் ஒருபக்கத்தில் ஒரு மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளத்துடன் தொடர்பான குறியீடுகள் இருக்கும்.

நாணயத்குற்றிகளை வெளியிடுவது செலவு கூடியது. பெருமளவிலான நாணயக்குற்றிகள் வழிபாட்டுத் தளங்களின் உண்டியல்களின் முடங்கியுள்ளன என மத்திய வங்கி தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►