இவ்வருடத்தில் முதல் நாள் நான்கு மாதங்களில் முகப்புத்தகம் தொடர்பாக 500
முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கணினி அவசர நடவடிக்கை பிரிவு
கூறியது.
பொய் விவரங்களை கொடுத்து தொடங்கப்பட்ட முகப்புத்தக கணக்குகள் பற்றியதாகவே
கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அப்பிரிவு
குறிப்பிட்டது. முகப்பத்தக கணக்குகளினுள் புகுந்து தாக்குதல் மற்றும் முகப்பத்தகம் தொடர்பான பயமுறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக பெண்கள் அல்லது இளஞ்சிறார்;களாக உள்ளனர்.
முகப்புத்தகம் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். முகப்பத்தகங்களை பயன்படுத்துவோர், படங்களை தரவேற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படங்களை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன அவசர பிரிவு கூறியது.
பெண் பிள்ளைகளின் கணக்குகளில் நுழைந்து விபர்ங்களை மாற்றிவிடுதல், படங்களை எடுத்தல், போலி கணக்குகளை உருவாக்குதல், கப்பம் கேட்டு மிரட்டுதல் என பலவகையான முறைப்பாடுகள் கிடைப்பதாக அந்தப் பிரிவு மேலும் கூறியது.
No comments:
Post a Comment
Leave A Reply