இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமநிலை, கௌரவம், நீதி போன்றவற்றை வழங்க கூடிய தீர்வு தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வெளிவிவகார அமைச்சரிற்குமிடையிலான இன்றைய சந்திப்பு அந்த நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இடம்பெறுகின்ற சூழலில் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுடனும் பேச்சுக்களை மேற்கொள்கின்ற நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினர் எனவும் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பிற்குள் இந்தியா முயற்சி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply