மன்னாரில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரை குறித்த தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபரான இராணுவ சிப்பாய் பொய்யான பெயரைப் பயன்படுத்தி, 14 வயதுச் சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் அழைப்பிற்கிணங்க வவுனியாவிற்கு சென்றிருந்த சிறுமி நிர்க்கதிக்குள்ளான நிலையில், சிலரால் மீட்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் மன்னார் பொலிஸாரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதனைத் தொடர்ந்தே, குறித்த இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டு நேற்று மன்னார் நீதிமன்றத்தினால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply