blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, August 23, 2014

மலேசியா சென்றடைந்த சடலங்கள் - நாடு முழுவதும் சோகம் (வீடியோ இணைப்பு)

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.17 அண்மையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.


குறித்த கடந்த மாதம் 17ம் திகதி 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் அந்த விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் அந்த விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம், உலகமெங்கும் அதிர்வலைகளையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.

இந்த விமான விபத்தில் உயிரிழிந்தவர்கள் 20 பேரின் சடலங்கள நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தது.


    விமான நிலையத்தில் இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியின்போது, பலியானவர்களின் உடல்களைப் பார்த்து குடும்பத்தினர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். மலேசிய மன்னர் அப்துல் கலிம், பிரதமர் நஜிப் ரசாக் அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தனர்.

இதையொட்டி நாடு முழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தன.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►