கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (22) பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.
ரயில்வே
திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
வழங்கப்பட வேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக
ரயில் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த எதிர்ப்பு
நடவடிக்கையினால் கரையோர மற்றும் பிரதான மார்க்கங்களில் பயணிக்கும் ரயில்
சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.
இதனால் கரையோர மார்க்கத்தின் ரயில் சேவைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
ரயில்வே
ஊழியர்கள், ரயில் நிலையத்திற்குள் ரயில் மார்க்கத்தை மறித்து எதிர்ப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டமையினால், ருஹூணு குமாரி ரயில், உரிய நேரத்தில் தனது
பயணத்தை ஆரம்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு
நிலையம் தெரிவித்தது.
இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
எவ்வாறாயினும்,
பொலிஸாரின் தலையீட்டில், ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டு
வரப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க
தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply