லிபியாவிற்கு தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை உடன்
அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு
வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
லிபியாவின் தற்போதைய நிலைமை
தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, லிபியாவிற்று தொழில் நிமித்தம்
தொழில் முகவர் நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் செல்வதற்கு மீள்
அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply