blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 23, 2014

பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் – ப.மா.ஆ

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன் பொருட்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் ஆலோசனை கைநூல் விநியோக நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

தேசிய ரீதியாக விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் அடங்கலாக, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவர்களின் விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மே மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►