கடந்த வருடம் காணாமல் போன மலேசியா எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமன்றி விமானிகளின் அறையில் இருந்த ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை அண்டார்டிகாவை நோக்கிப் பயணிக்க வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் செய்மதி தரவுகளை ஆராய்ந்த நிபுணர்களே இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆவணப் படமொன்றும் வெளியாகவுள்ளது.
எம்.எச். 370 விமானமானது அதன் இறுதி வானொலி அழைப்பின் பின்னர் 3 தடவை திரும்பியுள்ளதாகவும் இதன் விளைவாக தெற்கில் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்துள்ளதாக தடயங்களை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் விமானம் பல மணித்தியாலத்துக்கு பறந்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி 239 பேருடன் குறித்த விமானம் காணாமல் போனது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 24, 2015
மாயமான எம்.எச். 370 விமானம்!!! புது தகவல்!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply