பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இனவாத முத்திரை குத்தி ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
ஒரு புறத்தில் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்ட மூலம் பற்றி பேசும் அரசாங்கம், மறுபுறத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்ளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன.
இதன் மூலம் நல்லாட்சி பிரதமரின் இரண்டு நாக்குகளை உடைய வழமையான முகம் வெளிப்பட்டுள்ளது.
திவயின, இருதின மற்றும் ரிவிர போன்ற ஊடகங்களின் பெயர்களையும்
செய்தி ஆசிரியர்களின் பெயர்களையும் ரணில் விக்ரமசிங்க நேரடியாக குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் நல்லாட்சி அரசாங்கம், ஊடகத்தின் மீது பிரயோகிக்கும் கடுமையான அழுத்தமாகவே கருதப்பட வேண்டும்.
“இந்த ஊடகங்கள் ராஜபக்சவின் மலசல கூடங்களைக் கழுவும் சக்கிலி வேலை செய்வதாக” பிரதமர் குருநாகலில் கூறியுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவரைப் போன்று பிரதமர் நடந்து கொள்கின்றார்.
கடந்த அரசாங்க காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லை என குரல் கொடுத்தவர்கள் இது தொடர்பில் ஏன் அமைதி காத்து வருகின்றார்கள்.
கடந்த காலங்களில் பிழைகள் இடம்பெற்றிருந்தால் அதனை சுட்டிக்காட்டி மேலும் பிழைகளை செய்வது நல்லாட்சியாக அமையாது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, February 25, 2015
ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார் பிரதமர் !– பிரசன்ன ரணதுங்க
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது புலிகளின்‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்ற...
-
உலகின் நியதிக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும் அப்படியானதோர் நிகழ்வே டற்போது நடந்துள்ளது.
-
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
Leave A Reply