நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு இணக்கம் ஏற்பட்டுத்தப்பட்ட பின்பு தான் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு தாம் இணங்கியதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்ததாகவும், ராஜபக்சவினர் மீது மேற்கொள்ளப்படும் இடையூறுகள் குறித்து இதன்போது சமல் ராஜபக்ச ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் தெரியவருகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, January 17, 2015
எனது பிள்ளைகளை தொந்தரவு செய்யாதீர்கள்! மைத்திரியிடம் மன்றாடும் மஹிந்த!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
No comments:
Post a Comment
Leave A Reply