இலங்கையின்
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக
தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர
வேண்டும் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம்.
ஜெமீல் கூறுகின்றார்.
வடக்கு மாகாண
சபையில் முதலமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பது போல் கிழக்கு
மாகாணசபையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற
முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்களால் நடந்துகொள்ள முடியாது
என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு
மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்
(11 உறுப்பினர்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்)
மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (4 உறுப்பினர்கள்) இடையில் ஆட்சி
மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply