நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு
பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டது.
மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் முகல் ரோகட்ஹி இந்த பட்டியலை
நீதிபதியிடம் வழங்கினார்.
வெளிநாட்டில் கறுப்பு பணம் போட்டிருக்கும் 627 கணக்குதாரர்கள்
பெயர்கள் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பெயர்கள் கோர்ட் பார்வைக்கு மட்டும்
சீலிடப்பட்ட கவரில் அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக அறிவிக்கப்படுமா என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து அட்டர்னி ஜெனரல் முகல் கூறுகையில், ஏற்கனவே சுப்ரீம்
கோர்ட் மேற்பாற்வையில் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு
வெளிநாட்டில் பணம் போட்டுள்ளவர்கள் பட்டியல் சமர்ப்பித்துள்ளோம். எனவே
இதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை.
வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டால் அதில்
ஏற்படும் பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.
நேற்று முன்தினம் டாபர் முன்னாள் சேர்மன் பர்மன், லோகியா, ராதா
திம்லு ஆகிய 3 பேர் பெயர் மத்திய அரசு வெளியிட்டது.
நேற்று ஏனைய பெயர்களை
வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
கேள்வி எழுப்பினர். இன்று காலைக்குள் கறுப்பு பண பட்டியலை தாக்கல் செய்ய
வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோர்ட் உத்தரவு வெளியான பின்னர் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெட்லி
கூறுகையில், வெளிநாட்டு வங்கி கணக்காளர்கள் பெயரை சுப்ரீம் கோர்ட் முன்பு
தெரிவிப்பதில் எங்களுக்கு எந்த சிரமும் இல்லை.
கோர்ட்டில் தாக்கல் செய்வது
எங்களின் கடமை ஆகும். உரிய நேரத்தில் தாக்கல் செய்வோம். அப்போது உண்மைகள்
வெளி வரும் என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply