blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, October 29, 2014

பந்துல குணவர்த்தன பெரும்பான்மையினரின் கல்வியமைச்சராகவே செயற்படுகிறார்!

பந்துல குணவர்த்தன பெரும்பான்மையினரின் கல்வியமைச்சராகவே செயற்படுகிறார்!அமைச்சர் பந்துல குணவர்தன பெரும்பான்மையினருக்குச் சார்பான கல்வி அமைச்சராகவே செயற்படுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் பிரதியமைச்சர் பிரபா கணேசன்.

'மஹிந்தோதயா' திட்டத்தின் கீழ் கொழும்பின் எந்தவொரு தமிழ் பாடசாலைக்கும் தொழில்நுட்ப ஆய்வுகூட வசதிகள் வழங்கப்படாதமையை உதாரணம் காட்டியே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அத்துடன், மலையக மக்கள் பற்றிய சிந்தனை இந்த வரவு - செலவுத் திட்டத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கான விவாதத்தில் உரையாற்றியபோதே இதனைக் கூறிய பிரபா எம்.பி. அங்கு மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-

"சிங்கள மொழியில் கவியொன்றைப் பாடி வரவு - செலவுத் திட்ட உரையைக் கல்வி அமைச்சர் முடித்துள்ளார்.

ஆம்! பெரும்பான்மையினருக்குச் சார்பான கல்வி அமைச்சராகத்தான் அவர் செயற்படுகின்றார்.

மஹிந்தோதயா திட்டத்தின் கீழ் கொழும்பில் உள்ள எந்தத் தமிழ் பாடசாலைக்கும் தொழில்நுட்ப ஆய்வுகூட வசதி வழங்கப்படவில்லை.

இதேவேளை, அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்துச் செயற்படவேண்டும். அபிவிருத்தியுடன் இணைந்து அதிகாரப் பரவலாக்கலும் இடம்பெற வேண்டும் என்பது உண்மை.

ஆனால், இரண்டும் சமாந்தரமாக இடம்பெறவேண்டும். கூட்டமைப்பு, மக்களை ஒரு திசையை நோக்கியே அழைத்துச் செல்கின்றது. இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு அல்ல. அத்துடன், வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதுவுமில்லை எனக் கூறும் கூட்டமைப்பு, மலையக மக்களுக்கும் ஒன்றுமில்லை என்பதையும் குறிப்பிடவேண்டும்.

மலையக மக்கள் இன்றும் 10 அடி லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவேண்டும். இதுபற்றி ஜனாதிபதியுடன் நாம் பேசுகிறோம்" - என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►