இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் காணப்படுகிறது என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது உலக பொருளாதாரப் பேரவை. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
பெண்களின் அரசியல் வலுவூட்டல் தொடர்பில் இலங்கை 50 ஆவது இடத்தை வகித்து வருகிறது. பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி வகித்தல் குறித்த சுட்டியில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
142 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை இந்த வகையீட்டில் 136ஆவது இடத்தை வகிக்கின்றது.
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான வகையீட்டிலும் இலங்கை 109ஆவது இடத்திலுள்ளது. இந்த வகையில் அரசியல், பொருளாதாரம், ஊழியப்படை போன்ற துறைகளில் இலங்கை பாரிய பின்னடைவையே எதிர்நோக்கியுள்ளது.
ஆனாலும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.- என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply