
– இவ்வாறு இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நேற்று நேரில் தெரிவித்தார் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இதன்போது கருத்துத்தெரிவித்த சம்பந்தன், “தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தமது வாக்குகளை தங்களுக்கு அளித்துள்ளார்கள்” – என்றார்.
அத்துடன் இதுவரை காலமும் நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும், அவர்கள் எந்தவொரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply