அட்டாளைச்சேனை கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த கடற்கரை சிறுவர் பூங்கா இனந்தெரியாத சில விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாக விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த கடற்கரைப் பூங்காவானது எனது கட்டுப்பாட்டின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடற்கரை சிறுவர் பூங்கா சில வாரங்களின் பின்னர் முடிவுற்று பொதுமக்களின் பாவனைக்காக விடும் நிலைமையில் உள்ளதை சகிக்க முடியாத சில நாசகாரர்கள் இதை செய்திருக்கின்றனர்.
இந்த செயலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்களை சட்டத்துக்கு முன்னிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்.
இச்சம்பவம் இடம்பெற்ற தினம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஊரில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 12, 2015
அட்டாளைச்சேனை கடற்கரை பூங்கா இனம்தெரியாதோரால் உடைப்பு!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply