blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, January 12, 2015

புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் (விபரங்கள்)

லங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனா, ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய நபர்களை நியமித்துள்ளார்.

மேலும், புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மைச்சர்கள்:
  • நிதி அமைச்சர் - கலாநிதி ஹர்ஸ டி சில்வா
  • பாதுகாப்பு அமைச்சர் -  ஜெனரல் சரத் பொன்சேகா
  • சுகாதார அமைச்சர் - கலாநிதி ராஜித சேனாரத்ன
  • கல்வித் துறை அமைச்சர் - கபீர் ஹாசிம்.
  • பொது அலுவல்கள் அமைச்சகம் - சஜித் பிரேமதாச
  • வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் - ரவி கருணாநாயக்க
  • வெளிவிவகார அமைச்சர் - மங்கள சமரவீர
  • ஊடகம் மற்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சராக - ஜெயந்த கருணாதிலக
  • மின்சாரம்,  எண்ணெய், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சர் - பாட்டலி சம்பிக்க ரணவக்க
  • நீதி மற்றும் சட்ட அலுவல்கள் அமைச்சர் - கலாநிதி விஜயதாச ராஜபக்ச
  • சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் - பைசர் முஸ்தபா
  • விமானத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் -  ரவூப் ஹக்கீம்
  • விவசாய அமைச்சர் -  ரஞ்சித் மத்தும பண்டார 
  • போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் - கரு ஜயசூரிய
  • கலாசார, பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரத் துறை அமைச்சர் - ரோசி சேனநாயக்க
  • நீர்ப்பாசனம் மற்றும் மரம் வளர்ப்பு அமைச்சர் - நவீன் திசாநாயக்க.
  • விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சர் - அர்ஜுன ரணதுங்க
  • மீன்வளத் துறை அமைச்சர் - ரிஷாத் பதியுதீன்
  • தபால், தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் -  துமிந்த திஸாநாயக்க 
  • தொழிலாளர் அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் துறை அமைச்சர் - நிறோசன் பெரேரா
  • நாடாளுமன்றம், உள்ளூராட்சி, தேசிய முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சர் - ஜோசப் மைக்கல் பெரேரா
  • சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் - லட்சுமன் கிரியல்ல
  • கலாசார மற்றும் சமய விவகாரங்கள் துறை அமைச்சர் - ஜோன் அமரதுங்க
  • மொழிகள், சமூக விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் சமாதான துறை அமைச்சர் - எம்.ஏ.சுமந்திரன் 
  • பாரம்பரிய, கைத்தொழில், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் அபிவிருத்தி துறை அமைச்சர் - எம்.கே.டி.எச்.குணவர்தன.
ணை அமைச்சர்கள்:
  • நிதித் துறை - எரான் விக்கிரமரட்ன
  • கல்வித் துறை - அகில விராஜ் காரியவச
  • சுகாதாரத் துறை - புத்திக்க பத்திரண
  • ஊடகத் துறை - சுஜீவ சேனசிங்க
  • வெவிவகார அலுவல்கள் இணை அமைச்சர் - ருவான் விஜயவர்தன
  • நீதி மற்றும் சட்ட அலுவல்கள் இணை அமைச்சர் - அஜித் பி.பெரேரா
  • மீன்வளத் துறை இணை அமைச்சர் - பாலித ரங்கேபண்டார
  • போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் - அஜித் மன்னப்பெரும 
  • தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை இணை அமைச்சர் - ராஜன் ராமநாயக்க
  • மரநடுகை மற்றும் நீர்ப்பாசனத் துறையின் இணை அமைச்சர் -  பி.திகாம்பரம்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். https://www.facebook.com/EastNewsFirst

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►