எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களிடம் நிதி திரட்டப்படுவதாக அவர்களில் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு நீண்ட ஆயுள் வேண்டி மடுகந்தைப் பகுதியில் உள்ள விகாரையில் விசேட பூஜை நடத்தி, வலயக்கல்வி அலுவலகத்தில் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே இவ்வாறு நிதி திரட்டப்படுகிறது.
அனைத்து உத்தியோகத்தர்களையும் விரும்பிய அளவு நிதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கொஸ்லாந்தை பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு என நிதி சேகரித்து அனுப்புமாறு மாகாண கல்வித் திணைக்களத்தால் குறித்த வலயத்திற்கு கடிதம் அனுப்பப்பட்ட போதும் அது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply