மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் காவல்துறையில் பணியாற்றிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளாங்குளம் , கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.
மேசன் வேலை செய்யும் இவர் தனது வீட்டில் கல் அரிந்துகொண்டிருந்த இவரை இனந்தெரியாதவர்கள் வெளியில் அழைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
காதுப் பகுதியில் துளைத்த துப்பாக்கிச் சன்னத்தால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply